கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஒருவருக்கு கவர்னர் பதவி வாங்கிதருவதாக ஜோதிடர் ஒருவர் பணம் வாங்கி ஏமாற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஜோதிடர் யுவராஜ் தனக்கு கவர்னர் பதவி வாங்கித் தருவதாக 8.80 கோடி வாங்கி மோசடி செய்துள்ளதாகவும். ஜோதிடர் யுவராஜிடம் அவரை அறிமுகம் செய்து வைத்த போலீஸ் அதிகாரி ஒருவர் 2.75 கோடி ரூபாய் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.