டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது தனது புதிய கிராவிடாஸ் மாடல் காரை ஜனவரி 26ல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடல் படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
வெளியாகப்போகும் இதே கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டு எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 போன்ற மாடல்களுக்கு போட்டியாக நின்றது. மேலும் இந்த புதிய டாடா கிராவிடாஸ் மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஆனது 170 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுவதாக தெரிகிறது.
இந்த மாடலின் புதிய வேரியண்ட்டில் எலெக்டிரானிக் பார்க்கிங் பிரேக், புது வடிவமைப்பு மற்றும் எல்இடி டெயில் லைட்கள், ஸ்டெப்டு ரூப், ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, புதிய அலாய் வீல், சன்ரூப் என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.