முன்னணி இயக்குனர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தற்போது இளம் இயக்குனருடன் கைகோர்க்கிறார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. சூரரைப்போற்று படத்தைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தபடத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் சேர்ந்து வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்ற தகவல் உலா வருகிறது.
தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று இன்று நாளை பட இயக்குனரான ரவிக்குமார் உடன் கூட்டணி சேர உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். அந்தப்படத்தின் முதல்பார்வை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த முதல் பார்வையை பார்க்கும் பொழுது படம் முழுவதும் அறிவியல் கதையம்சம் ஆகவே இருக்கும் என்று தெரிய வருகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து இரும்புக்கை மாயாவி என்கிற படத்தை இயக்க உள்ளார் ரவிகுமார். இதை சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார் . அயலான் படத்திற்குப் பின்பு சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி படத்தை இயக்க உள்ளார். தற்போது அந்த கதையை மேலும் மேலும் மெருகேற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இரும்புக்கை மாயாவி படம் ஒரு சயின்டிஃபிக் திரில்லர் கதையாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது