அலி அப்பாஸ் மற்றும் ஜாபர் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமேசன் பிரைமில் வெளியான இந்தி வெப்சீரிஸ் தான் தாண்டவ்

இந்த வெப்சீரிஸ் வெளியான உடனேயே பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த வெப் சீரிசை பார்த்த அனைவருமே கலவையான விமர்சனம் அளித்து வந்த நிலையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்து மத கடவுளை இழிவாக காட்சிப்படுத்தியதாக
கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இவ்வாறு எழுந்துள்ள சர்ச்சையால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமானது அமேசான் பிரைம் இந்திய நிறுவனத்திற்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது