முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த ஜனவரி 27 ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து உரையாற்றினார். மேலும் அமைச்சர்கள் குறித்தும் விமர்சித்து ஸ்டாலின் சில கருத்துக்களை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அரசையும் அமைச்சர்களையும் விமர்சித்து பேசியது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது 6 அவதூறு வழக்குகள் அரசு சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் ஆவணங்களை ஸ்டாலினின் வழக்கறிஞர்களிடம் அளித்தார். பின்னர் வழக்கி விசாரணையை ஜனவரி 29 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.