கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இந்து இயக்கங்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் நடிகையும், பா.ஜ.க செய்திதொடர்பாளருமான குஷ்பூ பேசுகையில், “தி.மு.க-வில் நான் இருக்கும்போது திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது என்னை தவறாக புரிந்து கொண்டு சென்னையில் என் வீட்டில் தி.மு.க-வினர் கல் வீசினார்கள். வீட்டில் எனது 2 பெண் குழந்தைகளும் தனியாக இருந்தார்கள். அவர்கள் பயந்து எனக்கு போன் செய்தார்கள். பெண் குழந்தைகளின் தாய் என்ற முறையில் ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்றேன்.
என் வீட்டில் கல்லெறிந்தால் குழந்தைகள் பயத்தில் இருக்கிறார்கள் என்று நானும் கதறியபடி ஸ்டாலினை சந்திக்கச் சென்றேன். ஆனால் அங்கு, அவரை சந்திக்க முடியாது அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்றார்கள். அதன் பிறகு தான் என் வீட்டில் கல் எறிய சொன்னதே ஸ்டாலின்தான் என்று எனக்கு தெரிய வந்தது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத கட்சி திமுக. பாஜக-வில் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரே கட்சி பாஜகதான்” என்றார்