நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் உணவுப் பொருட்கள், சோப் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். சிலர் அந்த பிரபலங்களின் விளம்பரத்தை நம்பி பொருட்களை வாங்கி உபயோகிப்பது வழக்கம். ஆனால் அந்த பொருட்களின் நம்பகத்தன்மை சில நேரங்களில் விமர்சனங்களுக்குள்ளாகிவிடுகி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கங்குலி நடித்துள்ள பார்ச்சூன் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் விளம்பரம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது
இதையடுத்து அதானி வில்மார் நிறுவனம் பார்ச்சூம் எண்ணெய் விளம்பரங்கள் வெளியிடுவரதைஇ தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும் நிறுவனத்தின் நடவடிக்கையை விமர்ச்சித்தும் வலைதளங்களில் மீண்டும் கமெண்டுகள் பறக்கின்றன.