2004, 2009 பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி அதன் பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. தான் ஆட்சி செய்த சில மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி கோட்டை விட்டது. இப்போது ஓவைசியின் கட்சியும் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்ந்துவிட தன் ஆணிவேரான சிறுபான்மையினர் வாக்குகளையும் இழந்து தவித்துவருகிறது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில் காங்கிரஸில் அமைப்புரீதியாக மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என குரல் ஒலித்தது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் இதுகுறித்த் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஆகஸ்டில் கடிதம் எழுதினர். இந்நிலையில் காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். 5 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாம். எதிர்ப்புக் கருத்துக்கள் எதுவும் ஒலிக்காத நிலையில் கட்சியை வலுப்படுத்த சோனியா ஆலோசனை வழங்கினாராம். அதேபோல் ஏற்கனவே 1998, 2003ல் நடத்தப்பட்டதுபோல் சிந்தனை அமர்வு கூட்டங்கள் நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.