மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் பவாடியா குர்தில் என்னும் பகுதியில் வசிக்கும் கலாபாய் குர்ஜாருக்கு(80) மூன்று மகன்கள் இருந்துள்ளனர்.அந்த பெண் தன்னுடைய கணவர் பாபுலால் இறந்த பின்னர் தன் பெயரில் இருந்த சொத்துக்களை நான்குபகுதிகளாக பிரித்துள்ளார். அப்போது ஒரு பங்கை தனக்கு வைத்துக்கொண்டு மீதி பங்கை மூன்றாக பிரித்து தன்னுடைய மூன்று மகன்களுக்கு கொடுத்துள்ளார் . இப்படி சொத்து பிரித்தில் அவருடைய ஒரு மகன் கியான்சிங் திருப்தியடையவில்லை.
அதனால் தன்னுடைய தாயிடம் அடிக்கடி அவரின் பங்கையும் தனக்கு கொடுக்குமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார் அனால் அந்த தாய் தனக்கு பிறகுதான் தன் சொத்து உனக்கு கிடைக்கும் என்று தொடர்ந்து கூறியிருக்கிறார். அதனால் கோபமுற்ற அவரின் மகன் கியான் சிங் அந்த தாயை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்துள்ளார்.இந்த விஷயத்தை மறைக்க தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரிகளிடம் தாய் கட்டிலிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார் என்று பொய் கூறியுள்ளார்.ஆனால் சந்தேகப்பட்ட அவர்கள் அவரின் தாயை அருகிலுள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த போது அவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது .இதனைத் தொடர்ந்த் போலீஸ் வரவைக்கப்பட்டு நடந்த விசாரணையில் அவர் தன்னுடைய தாயை சொத்துக்காக கொன்று உள்ளார் என்கிற விஷயத்தை ஒப்புக்கொண்டார் . தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தாயைக் கொன்ற மகன் கியான் சிங்கை கைது செய்துள்ளனர்.