தல அஜித் வேற லெவல்..ஓப்பனாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் .அவருடைய நல்ல குணங்களை பற்றி அவரோடு பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அடிக்கடி கூறுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த வகையில் தல அஜித்தின் முதல் மெகா ஹிட் படமான “காதல் கோட்டை” படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.”காதல்கோட்டை” படத்தில் தல அஜித் செய்த செயல் ஒன்றை குறிப்பிட்டு பேசியிருப்பது தல அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தல அஜித்தை தவிர வேறு யாரும் செய்யமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அப்படி என்ன சொன்னார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஒருநாள் “காதல் கோட்டை” படப்பிடிப்பில் தனது காட்சியை முடித்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தாராம் நடிகர் அஜித். படத்தின் தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியன் சென்று நடிகர் அஜித்திடம் நலம் விசாரித்துள்ளார். ஆனால் தல அஜித்தின் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது. என்னவாயிற்று என்று அழுத்தமாக கேட்டாராம் சிவசக்தி பாண்டியன்.அப்போது தல அஜித் கொஞ்சம் முதுகு வலியாக இருக்கிறது எனக் கூறி உள்ளார்.
அதற்கு தயாரிப்பாளர் வேண்டுமென்றால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாரம். அதற்கு நடிகர் தல அஜித் இல்லை மொத்தமாக நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டுச் செல்கிறேன் என ஒற்றைக்காலில் நின்று அவருடைய காட்சிகளை நடித்து முடித்து விட்டுதான் முதுகுவலி சிகிச்சைக்கு சென்றார். வேறு எந்த நடிகராக இருந்தாலும் முதுகு வலி என சாக்குபோக்கு சொல்லி கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் இருப்பார்கள். ஆனால் தல அஜித் நேர்மையாக நடந்து கொண்டது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது என்று சிவசக்தி பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தல அஜித் எப்பவுமே வேற லெவல் என இந்த கருத்தை செமத்திய ஷேர் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.