தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.அவருடைய கேரியரில் மிகப்பெரிய தோல்வி படம் என்றால் அது மிஸ்டர் லோக்கல் தான்.இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தப் படத்தினுடைய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உடன் சண்டை ஏற்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் பல மேடைகளில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வை நேரடியாக தாக்கிப் பேசினார். சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலிருந்து அவருடைய மார்க்கெட்டுக்கு ஏற்றவாறு சம்பளத்தை பேசிய நிலையில் அதன் பின்னர் மார்க்கெட் உயர்ந்ததும் ஞானவேல் ராஜாவிடம் அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டது என பல செய்திகள் வெளிவந்தது.
” மிஸ்டர் லோக்கல்” படத்தை இயக்கியவர் இயக்குனர் எம்.ராஜேஷ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இவர் இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் ,போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் படம் படு தோல்வி அடைந்தது. அதற்குக் காரணம் ராஜேஷ் கதையில் சிவகார்த்திகேயனின் தலையீடுகள் அதிகமாக இருந்ததாம்.படத்தின் பாதிகாட்சிகள் தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு சிவகார்த்திகேயன் இந்த படத்தை எடுத்து விட்டதாக சமீபத்தில் சமூக வலைத்தள நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு இயக்குனர் ராஜேஷ் தமிழ் சினிமாவை பொறுத்தவரை செல்லாக்காசாக மாறிவிட்டார் என்று பேசப்பட்டு வருகிறார். கடைசியாக தற்போது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து ஒரு படம் இயக்க உள்ளாராம். அதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதுவும் கைவிட்டால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதுதான் என்று கோபத்தில் உள்ளாராம் இயக்குனர் ராஜேஷ்