கோலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.முதலில் குழந்தைகளுக்கு மட்டும் பிடித்த நடிகராக வலம்வந்து கொண்டிருந்தார். அடுத்தது தன்னுடைய வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்து தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் நட்சத்திரமாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர்களுக்கு மட்டுமே படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அளித்து வந்தார். ஆனால் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு மட்டும் தனது படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் வேலைக்காரன் ,சீமராஜா, ஹீரோ, போன்ற படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு கொடுத்தார் .இவர் நடிப்பில் தற்போது வெளிவர காத்துக் கொண்டிருக்கிற திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி செய்து நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் மாபெரும் வசூல் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் பல முறை இயக்குனர் முருகதாஸ் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வாய்ப்பு இயக்குனர் நெல்சனக்கு சென்றது .அதனால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஒரு படத்தை நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து எடுத்து அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. எனவே இருவரும் தற்போது இணைந்து ஒரு புதிய படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர்களது கூட்டணி உறுதியானால் அடுத்த இளைய தளபதி எங்கள் அண்ணன் சிவகார்த்திகேயன் தான் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள்