தமிழ்சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார் .மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் குறுகிய காலத்தில் உருவாகிய திரைப்படம்தான் ஈஸ்வரன் .இந்தப் படத்தை பார்ப்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரன் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
அதேபோல் வருகிற பொங்கல் அன்று விஜய் உடைய ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படமும் வெளியாகிறது. தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இறக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார் அந்த வேண்டுகோளில் சிம்பு ஈஸ்வரன் படம் இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு அவசரஅவசரமாக வருவதற்கு காரணம் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட திரையரங்குகளை மீட்பதற்காக தான.
ஈஸ்வரன் வெளியாகும் அந்த நாளில் விஜய் அண்ணனின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது. அதுமட்டுமில்லாமல் சிம்பு அந்த அறிக்கையில் விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் திரையரங்குகளின் நிலை கருதி தியேட்டர் ரிலீஸிற்காக பல மாதங்கள் காத்துக் கொண்டிருந்தார் என்று கூறியதோடு தனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் தனது ஈஸ்வரன் படத்தை பார்க்க வேண்டும் என்றும் அதுதான் திரையரங்குகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி என்றும் அவர் தெரிவித்துள்ளார். தளபதி படத்தை வைத்து சிம்பு தனது படத்தை விளம்பரம் செய்யும் தகவல் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது. சிம்பு போடும் இந்த கணக்குப் பலிக்குமா?