சிவானி நாராயணன் ஒரு விஜய் டிவியின் பிரபலம் ஆவார் இவர். கடந்த லாக் டவுனுக்கு முன்னர் இருந்தே இன்ஸ்டாகிராம் கணக்கில் பல லட்சம் பின்தொடர்பாளர்கள் குவிந்து இருந்தனர். அதன்பின் இவர் பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று தனது அட்டகாசத்தை தொடர்ந்தார்.
ஒருநாள் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்டாக வந்து அவரை வாங்கு வாங்கு என வாங்கினார். ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டில் ஷிவானியை விளாசியதை பார்த்த ரசிகர்கள், ஏன் மகள் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்த போதெல்லாம் மானம் போகவில்லையா என்று கேட்டனர். இந்நிலையில் ஷிவானி தனது கிளாமர் போட்டோக்கள் பலவற்றை டெலிட் செய்துள்ளார். மேலும் இனிமேல் அளவுக்கு மீறிய கிளாமர் போட்டோக்களை வெளியிட போவதில்லை என்றும் ஷிவானி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.