தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ்.” துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார். “துள்ளுவதோ இளமை” படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் சமீபத்தில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் ஷெரின் நடித்திருந்தார்.

Dhanush Kastooriraja
The Extraordinary Voyage of Fakir premiere in Paris, France – 23 May 2018
Indian actor Dhanush poses during the photocall of the premiere for the film ‘L’Extraordinaire Voyage du Fakir’ (The Extraordinary Voyage of the Fakir) in Paris, France, 23 May 2018. The film opens on 30 May 2018 in France.
இந்த படத்தில் ஆபாசம் சற்று தூக்கலாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. “துள்ளுவதோ இளமை” திரைப்படத்திற்கு பிறகு நடிகை ஷெரின் விஜய் தொலைக்காட்சியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். பிக்பாஸ் ஷோவுக்குப் பின்னர் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்போதும் தமிழ் சினிமா அவரை கண்டுகொள்ளவேயில்லை.இதற்காக 20 கிலோ எடையை குறைத்துள்ளார் ஷெரின். விதவிதமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் தன்பக்கம் திரும்பியும் சினிமா வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை.
துள்ளுவதோ இளமையில் ஷெரினோடு சேர்ந்து நடித்த தனுஷ் பட வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து வந்தாராம் ஆனால் தற்போது வரை அதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நடிகை ஷெரின் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ஹாலிவுட் வரை சென்று விட்டதால் தற்போது ஷெரினை கண்டுகொள்ளப் போவதில்லை என்று இணையவாசிகள் வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். தன்னோடு முதல் படத்தில் நடித்தவர் என்னும் முறையில் தனுஷ் கைகொடுப்பார் என காத்திருக்கிறார் ஷெரின்