மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. இவரது குழுவினர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கவர்ச்சியை விரும்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் ,தெலுங்கு ,இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஷகிலா படம் வெளியாகும் காலம் இருந்தது. . மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் ,மம்முட்டி ஆகியோரின் படங்களை விட அதிக அளவு வசூலை வாரி குவித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தவர் தான் நடிகை ஷகிலா. இந்தநிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி படமாக்கியுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா என்பவர் ஷகிலாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. தற்போது ஷகிலா படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.

இந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 3.4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து சாதனை புரிந்துள்ளது .அதுமட்டுமில்லாமல் யூடியூபில் சிறந்த டிரெண்டிலும் இந்த டிரைலர் இடம் பிடித்துள்ளது. ஷகிலா டிரைலருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் நடிகர் பங்கச் திரிபாதி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.ட்ரைலரை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் பார்த்தார்கள். இந்த திரைப்படத்தை வித்யா பாலனின் டர்டி பிக்சர் திரைப்படத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர் ஆனால் இது முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும்.
ஷகிலாவின் உண்மையான வாழ்க்கையை முழுமையாக காண்பித்துள்ளனர். இந்தப் படத்தை மக்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த டிரைலரே காண்பித்து விட்டது .ஷகிலா திரைப்பட டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மிக வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது

ஷகிலாவின் ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் .இது முழுக்க முழுக்க உண்மையான கதை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இயல்பாக சொல்லப்படும் ஒரு இயல்பான கதை. ங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்று அவர் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறுகிறேன் என்று இந்தப் படத்தினுடைய கதாநாயகியான ரிச்சா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஷகிலா ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி இந்த திரைப்படம் நாடு தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளிலும் முழுவதும் வெளியாக உள்ளது.