தமிழகத்தில் எப்பொழுது பள்ளிகள் திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த பத்து மாத காலமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் படித்து வருகின்றனர். இந்த சூழலில்
கொரோனா வைரஸ் குறைந்து உள்ளதால் தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதனையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்புக்கூட்டம் கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து இன்று முதல் கருத்து கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும் .மாணவர்கள் பெற்றோர்கள் இந்த வாரம் இறுதி வரை அவர்களது கருத்துகளை தெரிவிக்கலாம்
பள்ளி திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அவர் கூறினார்