தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உமேஷ் சின்ஹா, 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்கு தபால் ஓட்டு போடும் வசதி ஏற்படுத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே 24 அன்றுடன் முடிவடைகிறது. பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கேட்டுக் கொண்டுள்ளனர். கன்னியாகுமரி பாரளுமன்ற தொகுதிக்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.