இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தையோட்டி அவருடைய திருஉருவ படத்திற்கு சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறாரோ அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.
இனி திமுகவுக்கு மாற்று அதிமுக இல்லை எனவும் திமுகவுக்கு மாற்று நாம் திமிழர் தான் என்றும் அவர் கூறினார். திமுகவா நாம் தமிழரா – திராவிடரா இல்லை தமிழரா என்ற போட்டி இந்த தேர்தலில் வரப் போகிறது என்றும் அவர் கூறினார்.
அதிமுகவை எதிர்காமல் ஏன் திமுகவை மட்டும் எதிர்கிறீர்கள் என்ற கேள்விக்கு அது எதிர்க்க வேண்டிய கட்சியே கிடையாது அதை ஏன் எதிர்க்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும் வில்லன் இல்லாமல் கதாநாயகனுக்கு என்ன வேலை உள்ளது எனவும் மறைமுகமாக அதிமுகவை சீமான் விமர்சித்தார்.