ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30. 86 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.
1173 அரசு பள்ளிகளுக்கு தலா 500 விதம் ரூபாய் 30,86,500 நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது இந்த நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுபோக ஒரு வகுப்புக்கு 50% மாணவர்களை வைத்து பாடம் நடத்த வேண்டும் என்றும் சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவற்றை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சானிட்டைசர் பயன்பாட்டுக்குப் பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.