முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் நான்கு ஆண்டு தண்டனை பெற்று கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருக்கும்போதுதான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் சசிகலா கொரோனாவில் தொற்றில் இருந்து மீண்டதாகவும், அவரது உடல்நிலை சீரானதை அடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவவும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் மருத்துவமனையில் இதுந்து இன்று காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் பிப்ரவரி 3 அல்லது 5-ம் தேதி சசிகலா சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.