முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்படு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெதிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. அவ்அரது நாடித்துடிப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை கட்டுப்பாட்டில் உள்ளன. அவர் உணவை இயல்பாக எடுத்துக்கொள்கிறார். கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிக்ச்சையே அவருக்கு அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்கிறார். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்” என கூறபப்ட்டுள்ளது. சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது