முன்னாள் முதல்வர் ஜொயலலிதாவின் தோழி சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் வரும் 27-ம் தேதி விடுதலை ஆக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல்நலக்குறைவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கேரளா அல்லது புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராஜராஜன் கர்நாடாகா மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து விகோரியா மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டுள்ளார். இதற்காக அவர் சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அவரை பார்ப்பதற்காக கூடியிருந்தவர்களை நோக்கி கையசைத்துவிட்டு கிளம்பி சென்றார் சசிகலா.
தனியார் மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில் அவர் இன்னும் 3 நாட்கள் வரை தங்க வைக்கப்படுவார் என கூறப்படிகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.