முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். அவரது கார் மீது திடீர் தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, மதுரையில் இருந்து காரில் தூத்துக்குடி போய்க்கொண்டு இருந்தார். காரின் பின்னாலேயே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சசிகலா புஷ்பா காரின் பக்கக்கண்ணாடியை இரும்பு ராடால் அடித்தனர். டிரைவர் காரை வேகமாக ஓட்டினார். ஆனாலும் விடாமல் துரத்திப்போய் தாக்கிய இருவரால், சசிகலா புஷ்பாவும் காயம் அடைந்தார். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லவே காரியாப்பட்டி போலீஸார் விரைந்துவந்தனர். தாக்குதல் நடத்தியதன் நோக்கம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.