சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனை விரைவில் முடிவடைய இருக்கிறது. மேலும் அபராத தொகையான ரூ.10 கோடியே பத்தாயிரம் ரூபாய் கடந்த மாதம் செலுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையே தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளதாக கர்நாடகா சிறைத் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில்
வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலாவின் வழக்கறிஞர், சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆக இருப்பதாகவும். அதன் பிறகு அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து அந்த வழக்கு பிப்ரவரி 4-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. சசிகலா வழக்கறிஞர் கூறிய தகவலால் வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆக இருப்பதாக வெளியான தகவலில் உறுதியாகிறது