27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அடுத்ததாக சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 10 கோடியே 10 லட்சம் அபராதத்தை கடந்த ஆண்டு செலுத்தினார். இதனையடுத்து தண்டனை காலம் முடிவடையும் சூழலில் சசிகலா வருகின்ற 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளார் என்று பெங்களூர் சிறை நிர்வாகம் கடிதம் அனுப்பி இருப்பதாக அவருடைய வக்கீல் செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.
இதனால் தான் விடுதலையாகும் தினத்தை சசிகலா ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தார் இந்த நிலையில் நேற்று பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பெரிதும் அவதிப்பட்டு அடுத்து அவருக்கு முதல்கட்டமாக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதை அடுத்து நேற்று மாலை 5.45 மணியளவில் மேலும் சிகிச்சைக்காக அவர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரில் உள்ள சிவாஜி நகரில் பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய அவரை சக்கர நாற்காலியில் உட்காரவைத்து போலீசாரும் மருத்துவ ஊழியர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் நல்ல நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு தண்டனை கைதிகளுக்கான வார்டில் சசிகலா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவருக்கு காய்ச்சல் மூச்சுத்திணறல் அறிகுறி தென்படுவதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.இதில் அவருக்கு கொரோனா வைரஸ் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. இதில் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு சீராக இருப்பது பற்றியும் தெரிய வந்தது. இருப்பினும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 54 சதவீதமாக இருப்பதாகவும் இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது. எனவே அதற்காக அவர்கள் ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் பெங்களூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலா சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிடி ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருகின்ற 27-ஆம் தேதி விடுதலைக்காக உள்ள நிலையில் சசிகலாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு வருகிறது. அவரது ஆதரவாளர்களிடையே தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற் பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி வருகிற 27-ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது