சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மொபைலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் எனவும் தெரிகிறது. இதன் 4 ஜிபி வேரியண்ட் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும்.
இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அந்நிறுவனம் முன்னணி இடம் பிடிக்க இந்த சீரிஸ் பேருதவியாக இருந்தது. 2020 ம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் சுமார் 1.5 கோடி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்று இருப்பதன் மூலம் தனது 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது