சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ரக ஸ்மார்ட்போன் மாடல்களுடைய விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. இந்த விலை குறைப்பின் மூலம் சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது குறைக்கப்பட்டு இருக்கும் விலைகள் முன்னதாக சென்ற ஆண்டு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய விலை பட்டியல் சாம்சங் கேலக்ஸி ஏ51 (6 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 20,999, சாம்சங் கேலக்ஸி ஏ51 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 22,499 , சாம்சங் கேலக்ஸி ஏ71 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 27,499 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ சாம்சங் வலைதளத்தில் பிரதிபலிக்கிறது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் தளங்கள் மற்றும் இதர ஆப்லைன் ஸ்டோர்களிலும் இந்த புதிய விலை மாற்றங்கள் மாற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.