சகாயம் ஐ.ஏ.எஸ் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணாப்பா கடிதம் அளித்திருந்தார். இவ்வளவு நாட்களாக அந்த விண்ணப்பம் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்துக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்-க்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும். சம்பள உயர்வு வழங்கப்படவில்லை, முக்கியத்துவம் இல்லாத துறைகள் ஒதுக்கப்பட்டது என மிகவும் வலிகளுடன் அவர் பணி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கோ ஆப் டெக்ஸ் இயக்குநராக இருந்த சமயத்தில் வேட்டி தினத்தை அறிமுகப் படுத்தி பிரபல படுத்தியதே சகாயம்தான். வேட்டி தினமான இன்று அவரது விண்ணப்பத்தை ஏற்று பணியில் இருந்து விடுவிக்கப்படிருப்பதுதான் சோகம்.