முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை அளிக்க நீங்கள் பியூட்டிபார்லரை தேடி ஓடவேண்டிய அவசியமே இல்லை. உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களே போதும். இதை முயற்சித்துப் பாருங்கள். வெறும் 20 நிமிடத்தில் உங்கள் முகம் பள பளவென ஜொலிக்கும்.
நம்முடைய முகத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் நிரந்தர தீர்வைப் பெற்றால் , நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது தான் உண்மை. அதற்காக அதிகப்படியான செலவு கூட செய்ய வேண்டிய தேவையில்லை. நம் சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை சரியான அளவாக கலந்து, முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகப்பரு பிரச்சனை, முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், பிக்மெண்டேஷன், முகசுருக்கம் போன்ற அனைத்திற்குமே நல்ல தீர்வை இது தரும்.

அந்த அற்புதமான பொருட்கள் அரிசிமாவு, புளிக்காத கெட்டி தயிர், தக்காளி பழச்சாறு முதலியவை தான். அரிசி மாவை பயன்படுத்தி முகத்தில் ஸ்கரப் செய்வார்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா அதில் தவறொன்றும் கிடையாது. வெறும் அரிசி மாவை பயன்படுத்துவதோடு இந்த குறிப்பிட்ட 2 பொருட்களை சேர்க்கும்போது, முகம் மேலும் அழகாக மாறி நீண்ட நாட்களுக்கு இளமையை தக்க வைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமே இல்லை
முதலில் ஒரு சுத்தமான பௌலில் அரிசி மாவு 1 ஸ்பூன், எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு புளிக்காத கெட்டித் தயிர், 1 ஸ்பூன் அளவு தக்காளி பழச்சாறை ஊற்றிக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம் இந்த பொருட்களையெலாம் நன்றாக கலந்து, முகத்தில் கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கத்திற்கு தடவி 20 லிருந்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதாவது இந்த ஃபேஸ் பேக் உங்களுடைய முகத்தில் 30 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

பின்பு, உங்களது கையில் சுத்தமான தண்ணீரை தொட்டு முகத்தில் உள்ள ஃபேஸ் பேக்கை ஈரமாக்கி விட்டு அதன் பின்பு, வட்டவடிவமாக மசாஜ் செய்யவும். அழுத்தி மசாஜ் செய்ய வேண்டாம் சருமத்தில் கீறல் ஏதேனும் விழுந்தால், சீக்கிரமே சுருக்கம் விழுந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுஙகள்.
ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்து விட்டு முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி விடுங்கள். இபபோது கண்ணாடி முன் செல்லுங்கள் உங்களுடைய முகம் பளிச்…பளிச் என்று ஜொலிஜொலிக்கும். வாரத்திற்கு 1 நாள் இந்த ஃபேஸ் பேக்கை போட்டாலே முகத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். நேரம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் கூட உங்கள் முகத்திற்கு இந்த ஃபேஸ்பேகை பயன்படுத்தலாம். பயன்படுத்துங்கள் பலனை உணருங்கள் ஜொலி ஜொலியுங்கள்.