வருகிற ஜனவரி 26ம் தேதி நாம் நம் நாட்டின் குடியரசு தின விழாவை கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 குடியரசு நாள் அமோகமான ஏற்பாடுகளுடன் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டோ கொரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் குடியரசு தின நாளுக்கென சில கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. லண்டனை போலவே தமிழகத்திலும் உருமாறிய வைரஸ் ஆனது ஆங்காங்கே வரத் தொடங்கி இருப்பதால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தமிழக மக்கள் யாவரும் குடியரசு தின விழாவை நேரில் காண வருவதை தவிர்க்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.