இந்தியப் பெண்களை மிரட்டும் எலும்பு தேய்மானம்..
ஈஸியாக போக்க சூப்பர் டிப்ஸ்..
40 வயதைத் தாண்டி விட்டாலே நமது உடம்பில் பல்வேறு நோய்கள் குடியேறிவிடும்.அதிலும் பெண்களைப் பொறுத்தவரை எலும்பு தேய்மானம் பாடாய்படுத்திவிடும்.
இந்தியாவில் சுமார் 6 கோடிக்கு மேல் பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 50 வயதைத் தாண்டிய பெண்களில் இரண்டு பேரில் ஒருவர் எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாராம். எலும்பு தேய்மானம் நோயால் அவதிப்படுவோரில் இந்தியப் பெண்கள் தான் அதிகம்.
வருமுன் காப்போம் என்பதை மனதில் பதிய வைத்து கொண்டு அன்றாட உணவில் கால்சியம் வைட்டமின் கே, டி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் எந்த வகை நோய்களையுமே வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.பால் தயாரிப்பு உணவுப் பொருட்களை எடுத்து கொள்ளலாம். ஒருடம்ளர் பாலில் 300 கிராம் கால்சியம் அடங்கி இருக்கிறது.

இனிப்பு அதிகம் சேர்க்காமல் பால் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதுபோக கால்சியம் சத்துகள் அதிகம் உள்ள கடல் மீன்கள் ,பாசிகள் ,சோயாபீன்ஸ் கொண்டைக் கடலை, ஆகியவற்றிலும் அன்றாட உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.இதை தடுக்க அந்த பருவத்தில் அவர்கள் கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
உடல் பருமனாக இருக்கக்கூடிய பெண்களுக்கு எலும்பு தேய்மானம் நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதால் உடல்எடையை குறைக்கும் எளிய பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடுத்தர வயது பெண்கள் இப்பொழுதே கடைபிடித்து வந்தால் எதிர்காலத்தில் நிபுணர்கள் கனித்த தேய்மான விகிதத்தை முறியடித்துக்காட்டி எலும்பு தேய்மானம் இன்றி வாழலாம்