பச்சை மாங்காய்ல ஊறுகாய், பச்சடி, வற்றல், சாம்பாரில் போடுவது, புளிக்குழம்பு, மீன் குழம்பு என வித விதமாக பயன்படுத்துவார்கள். ஆனால் அதைவிட இந்த ஜூஸாக செய்து குடிக்கும்போது வெயிலின் வெம்மைக்கு மிக இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.தேவையான பொருள்கள்
மாங்காய் –
பச்சை மிளகாய் –
சர்க்கரை –
ஐஸ் கட்டிகள் –
செய்முறை
இது மிக மிக எளிமையாக செய்யும் பச்சை மாங்காய் ஜூஸ். ஒரு மாங்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு மற்றும் புளிப்புடன் கொஞ்சம் காரமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அரை பச்சை மிளகாயை இதில் சேர்த்துக் கொள்ளலாம். காரம் வேண்டாமென்று நினைப்பவர்கள் பச்சை மிளகாயைத் தவிர்த்து விடலாம்.
இவற்றை நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அந்த அரைத்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதில் ஐஸ் கட்டிகள் சேர்த்தால் பச்சை மாங்காய் ஜூஸ் ரெடி. இதில் அரைத்த பின் வடிகட்டத் தேவையில்லை.