சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஜய் தொலைகாட்சி ரக்ஷன் விளக்கம் அளித்துள்ளார்
நடிகை சித்ரா கடந்த வாரம் தற்கொலை செய்துக் கொண்டார். இது தொடர்பாக அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சித்ராவின் ஒரு நெருங்கிய தோழி, சித்ரா விஜய் தொலைகாட்சி தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷனுடன் டேட்டிங் சென்றதாகவும் அப்போது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் விடியோ ஒன்றை ரக்ஷன் சித்ராவுக்கு தெரியாமல் எடுத்து அதை அவரிடம் காட்டி மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரக்ஷன் தானும் சித்ராவும் டேட்டிங் சென்றது உண்மைதான் என்றும் ஆனால் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கூறுவது எல்லாம் பொய் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். நான் மிகவும் குறைவாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகன், எனக்கும் சித்ராவுக்கும் நல்ல நட்பு இருந்தது. அவரது மரணத்தை தொடர்ந்து சித்ராவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டுக்கு கூட சென்றிருந்தேன். நான் அவரை மிரட்டி வந்ததாக கூறுவது உண்மை என்றால் என்னால் எப்படி அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியும் என வினவியுள்ளார்