சீனா ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சமயத்தில் அதற்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. உலக நாடுகளின் ஆதரவும் நமக்கு கிடைத்தது.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் மன உறுதியை அளித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் புதிய ராணுவ மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது இந்திய ராணுவத்தின் கவர்ந்திழுக்கும் செயல்திறன் நாட்டின் மன உறுதியை உயர்த்தி பிடிக்க உதவியது. இந்திய மக்கள் தலை நிமிர்ந்து நிற்கவும் ராணுவத்தின் செயல்திறன் வழிவகுத்தது” என்றார். ராஜ்நாத் சிங்கின் பேச்சைக் கேட்ட ராணுவ வீரர்கள் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர்.