கடந்த மே 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் இறந்தனர் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை நடிகர் ரஜினி காந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த துப்பாக்கி சூடு தொடர்பக ரஜினிகாந்த் 19 ஜனவரி 2021 அன்று தூத்துக்குடியில் உள்ள ஆணையத்தின் அலுவலக்த்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கூறி சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கமவே ஒருமுறை சம்மன் அனுப்பப்பட்டு ரஜினிகாந்த் ஆஜராகாத நிலையில் இப்போது இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.