ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிட்சையில் இருந்த ரஜினி பூரண நலம் பெற்ற நிலையில் சற்றுமுன் வீடு திரும்பினார்.
ரஜினிகாந்த் ஐதராபாத்தில் அண்ணாத்தே படத்தின் சூட்டிங்கிற்குச் சென்றார். இந்த சூட்டிங்கில் பணியாளர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. ரஜினியும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது சோதனையில் தெரிய வந்தது. இந்நிலையில் ரஜினி திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாட்டின் காரணமாக ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிட்சையளிக்கப்பட்டு வந்தது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ரஜினி குணமடைந்தார். இதை தொடர்ந்து சற்றுமுன் ரஜினி வீடு திரும்பினார்.
அவரை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினி வீடு திரும்பியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.