ரஜினியின் அண்ணாத்த பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு பாதியில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. . இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவந்தார். அப்போது திடீரென கரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரம் அடைந்தது. தொடர்ந்து பொதுமுடக்கமும் வந்தது. இதனால் அண்ணாத்த சூட்டிங் ரத்தாகி இருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி கட்சி பெயரை அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் பரபரப்பு பேட்டி கொடுத்தார். மேலும் தன் உயிரையே தமிழக மக்களுக்கு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.
இந்நிலையில் கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து சன்பிக்சர்ஸ் மீண்டும் அண்ணாத்த பட சூட்டிங்கை தொடங்கியது. ரஜினி, நயன்தாரா சம்பந்தபட்ட காட்சிகள் ஐதராபாத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் இந்த படக்குழுவில் இடம்பெற்ற பணியாளர்களில் எட்டுபேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திடீரென அண்ணாத்த பட சூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.