நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைவிடுத்து வந்தனர். இந்நிலையில் ரஜினி, வரும் 31ம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும், ஐனவரியில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்தார். மேலும் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனையும் வழங்கிவிட்டு அண்ணாத்த படத்தின் சூட்டிங்கிற்காக ஹைதராபாத்திற்கு சென்றார் ரஜினி.
இந்நிலையில் நடிகர் ரஜினி, படத்தின் சூட்டிங்கில் வேலை செய்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அண்ணாத்த படத்தின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. கூடவே, ரஜினி தன்னைத் தானே தனிமப்படுத்தியும் கொண்டார். இந்நிலையில் நடிகர் ரஜினி சற்றுமுன் திடீரென ஹைதராபாத்தில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையில் சிகிட்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘நடிகர் ரஜினிகாந்த்க்கு கொரோனா தொற்று இல்லை. அதேநேரம் அவரது இரத்த அழுத்ததில் மாறுபாடு இருப்பதால் சிகிட்சைக்கு சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து சிகிட்சை அளிக்கப்படுவதாகவும் அப்பல்லோ தரப்பு சொல்லியிருக்கிறது.’’ ஏன்கனவே நடிகர் ரஜினி, இருமுறை சிறுநீரக மாற்று சிகிட்சை செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.