பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்ததுடன், இதற்காக தனித்தனி தேதிகளையும் அறிவித்துள்ளது. ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேட்டிலும், 16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 14-ம் தேதி மதுரை அவனியாபுரம் வருகிறார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிடுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை காண தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி. ஜனவரி 14ம் தேதி அன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொள்ள உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது