மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை புரிந்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.
அப்போது அவர் கூறுகையில், “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு போட்டி குறித்து முதலில் என்னிடம் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை துன்புறுத்தப்படுகிறது என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் நேரில் வந்து பார்த்தபோதுதான் எந்த துன்புறுத்தலும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்பதையும் உணர்ந்துகொண்டேன். தமிழ் மக்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், அதற்காக அதற்கு அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கலாச்சாரங்கள் நசுக்கப்படுகின்றன, தமிழ்மொழியை நசுக்க முயற்சிகள் நடக்கின்றன. 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும். வேண்டுமானால் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்