காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி-யுமான ராகுல்காந்தி கூறுகையில், “இந்தியா பலவீனமாகி உள்ளது என்பதை சீனா பார்த்து கொண்டிருக்கிறது. உலக வரைப்படத்தை மாற்ற சீனா எண்ணுகிறது. ஆனால், இந்தியாவுக்கோ உலகளாவிய பார்வை இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவை சீனா பல முறை சோதித்து பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும்” என்றார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதி ம் இந்தியா – சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது. இங்கு இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4.5 கிலோ மீட்டர் தொலைவில் சீன ராணுவம் புதிதாக கிராமத்தை உருவாக்கி உள்ளதாக செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்துதான் ராகுல்காந்தி தனது கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது