மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரஹானே ரன் அவுட்டாகி ஆட்டம்இழந்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பாக்சிங் டே என்று அழைக்கப்பட்டு வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தயாரானது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 195 ரன்களில் ஆல் அவுட் செய்யப்பட்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 91.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது .அதன் பின்னர் மழை பெய்யத் தொடங்கியதால் முன்கூட்டியே இரண்டாவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரகானே ரன் அவுட் செய்யப்பட்டார்.இதனையடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விலத் தொடங்கியது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 319 எடுத்துள்ளது தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 115 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.