கிராமத்து படங்களை அதிரடியான கதை களத்துடனும் குடும்ப பாவனைகளும் எடுப்பதில் வல்லவர் இயக்குனர் முத்தையா. ஏற்கனவே இவர் இயக்கிய கொம்பன், குட்டிப்புலி, போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ஒரே மாதிரியான திரைக்கதையுடன் அவரது படங்கள் இருப்பதால் கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்கள் வரவேற்பை பெறவில்லை மேலும் முத்தையா மீது மக்களிடையே ஜாதி படங்கள் இயக்குவது போன்ற பிம்பம் இருக்கின்றது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய அடுத்த பட வேலைகளை விறுவிறுப்பாக முடித்து உள்ளார் இயக்குனர் முத்தையா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளிக்கு நான் ரொம்ப பிசி என்கிற படத்தை தயாரித்து நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் அதே மாதிரி ஒரு படத்தை தயாரித்து வருகின்றது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
முத்தையா இயக்கத்தில் புலிகுத்திப் பாண்டி என்கிற படத்தை தயாரித்துள்ளது அந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமணன் நடித்துள்ளனர். புலிகுத்தி பாண்டி வருகிற பொங்கலுக்கு சன் டிவியில் நேரடியாக வெளியாக உள்ளது. எது எப்படியோ முந்தைய படங்கள் போல இந்தப் படத்திலும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகின்றது. சமூகத்தில் புலிகுத்தி பாண்டியன் முதல் பார்வை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதனை தொடர்ந்து தற்போது 30 வினாடி டீசர் வெளியாகி இணையதளங்களை வெளியாகி வைரலாகி வருகின்றது.
https://www.youtube.com/watch?v=yOLMo_gGZlA&feature=youtu.be