சமீபத்தில் இந்தியாவில் பப்ஜி கேமானது தடை செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் மீண்டும் பப்ஜி கேம் புத்துயிர் பெற்று வெளியாகும் என ஒரு அறிவிப்பு வந்துள்ளது.
அந்த வகையில் பப்ஜி மொபைல் கேமிற்கான டீசர் கூட யூடியூபில் வெளியிடப்பட்டது. ஆனாலும் இந்த கேமின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையே நிலவுகிறது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பப்ஜி கேம் மீண்டும் இந்தியாவில் வெளியாகுமா என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டு தற்போது பதில் வந்துள்ளது.
இதற்கு பதில் அளித்திருக்கும் மத்திய அமைச்சகமானது இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியிடப்படுவதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த பப்ஜி மொபைல் கேமானது தாய் நிறுவனம் மற்றும் சீனாவின் டென்சன்ட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டதாம். ஆதலால் தற்போது பப்ஜி மொபைல் கேம் மீண்டும் புது அம்சங்களுடன் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது என்றும் பப்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது
என்ன நடக்க போகிறதோ.…? ஜெய் பப்ஜி!!!!!!