ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அதே படத்தில் இயக்குனராக அறிமுகமாக உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பேயை வைத்து மட்டுமே கல்லா கட்டி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ் ஹீரோவாக நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற சிலபடங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஆடுகளம் படத்தை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ருத்ரன் என்கிற படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடிக்கவுள்ளார்.இதற்கான அறிவிப்பு சமீபத்தில் அவருடைய புகைப்படத்துடன் வெளியானது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்ற உள்ள நிலையில் ருத்ரன் படத்தின் இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. தற்போது அந்தப் படத்தினுடைய இயக்குனர் யார் என்று தெரிய வந்துள்ளது புத்திரன் படத்தை பைவ்ஸ்டார் கதிரேசன் தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தயாரிப்பாளரே இயக்குனர் அவதாரம் எடுப்பதால் கதையை பார்த்து, பார்த்து செதுக்குவார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.