நாம் பொங்கல் கொண்டாட்டத்தில் இருக்கின்றோம் பொங்கல் விழாவானது பொங்கல், மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினம் என பல பரிணாமங்களை உள்ளடக்கியது.

இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு தலை வணங்குகிறேன். திருவள்ளுவரின் சிந்தனைகளும், படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன எனவும் இளைஞர்கள் திருக்குறளை படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.