பிரபுதேவா நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சமீபத்தில் திருமணமான நடிகை நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காமல் எப்படி பிரபுதேவாவுக்கு தொடர்ந்து இத்தனை பட வாய்ப்புகள் குவிகிறது என்பது கோலிவுட் வட்டாரங்கள் மத்தியில் புரியாத புதிராக இருந்து வருகிறது. பிரபுதேவாவின் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் சுலபமாக டப் செய்து காசு பார்த்து விடுகிறார்களாம். அதுமட்டுமில்லாமல் டிவி காபிரைட்ஸ் பெற்று நல்ல கல்லா கட்டுகிறார்கள். இதனாலேயே பிரபுதேவாவுக்கு தொடர்ந்து பல படங்கள் குவிந்து வருகின்றது.
அந்த வகையில் யாமிருக்க இப்போது பயமேன், காட்டேரி ,போன்ற படங்களை இயக்கிய டிகேயின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் பிரபுதேவா நடிக்கவுள்ளாராம். பிரபுதேவாவுக்கு ஜோடியாக முதன்முறையாக இந்தப்படத்தில் காஜல்அகர்வால் இணைந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். இதனை கேள்விப்பட்ட கோலிவுட் வட்டாரங்கள் இப்போது தான் அந்த பிள்ளைக்கு கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள பிரபுதேவாவுக்கு ஜோடியா? என பதறிப்போய் கிடக்கிறார்கள்.