தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகையான 2500 ரூபாய் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்ஜும் பணி இன்று தொடங்கியது. இதற்காக ஏற்கனவே வீடுகளில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது. டோக்கன் படி குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பரிசுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறுகையில், “ரேஷன் கடைகளில் காலையில் நூறுபேருக்கும், மதியத்திற்கு மேல் நூறுபேருக்கும் என பொங்கல் பரிசுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல்பரிசு பெறாதவர்கள் வரும் 13-ம் தேதி பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.