பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி-க்கு கடந்த சனிக்கிழமை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சவுரவ் கங்குலிக்கு மிகவும் நெருக்கமானவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் பட்டாச்சார்யா மருத்துவமனைக்குச் சென்று கங்குலியை நலம் விசாரித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், “கங்குலியை அரசியலில் சேரக் கூறி சிலர் அவருக்கு அதிகமான அழுத்தம் கொடுத்துள்ளார்கள். அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

இதற்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், “சிலர் நோயுற்ற மனநிலையால், ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். கங்குலி குணமடைய வேண்டும் என்பதுதான் லட்சக்கணக்கான ரசிகர்களின் வேண்டுதல்” என்றார்